இந்தியா அதிரடி தாக்குதல்; பாகிஸ்தான் வீரர்கள் 12 பேர் பலி!

  Newstm Desk   | Last Modified : 22 Mar, 2019 07:42 pm
indian-army-retaliates-and-kills-12-pakistan-soldiers

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம்  நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு பதிலடியாக, இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த 12 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில், பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்ததை மீறி கடந்த வாரம் திடீர் தாக்குதல் நடத்தியது. ராஜோரி பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் இன்று திடீர் தாக்குதல் நடத்தியது. இதில், பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 12 பேர் கொல்லப்பட்டதாகவும், அதில் 2 பேர் ராணுவ அதிகாரிகள் என்றும் கூறப்படுகிறது. 

பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த இரண்டு ஹெலிகாப்டர்களில், கொல்லப்பட்ட 12 வீரர்களின் உடல்களை அந்த நாட்டு ராணுவம் எடுத்துச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close