நாடு முழுவதும் ஒன்றரை ஆண்டுகளில்  76½ லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் !

  Newstm Desk   | Last Modified : 23 Mar, 2019 06:59 am
76-5-lakhs-new-jobs-in-india-says-epfo

ஒன்றரை வருடங்களில் 76.48 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி இருப்பதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கடந்த ஜனவரி மாதம் வரையிலான 17 மாதங்களில் புதிதாக உருவான வேலைவாய்ப்புகளை நாடு முழுவதும் புதிதாக உருவான வேலைவாய்ப்புகள் குறித்த புள்ளி விவரங்களை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

அந்த புள்ளி விவரத்தில், 17 மாதங்களில் 76.48 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி இருப்பதாகவும், 76.48 லட்சம் புதிய சந்தாதாரர்கள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் சமூக பாதுகாப்பு திட்டங்களில் இணைந்துள்ளதாகவும் தகவல்  தொழிலாாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது.  மேலும் அதிகபட்சமாக கடந்த ஜனவரி மாதம் 8.96 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close