டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது போலீசில் புகார் அளித்த பாஜகவினர்!

  Newstm Desk   | Last Modified : 24 Mar, 2019 09:23 am
complaint-filed-against-arvind-kejriwal-s-tweet

இந்து மத உணர்வை புண்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாக டெல்லி முதல்வர் அர்விந்த்  கெஜ்ரிவால் மீது பாஜகவினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். 

நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில், டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், ட்விட்டரில் ஒரு பதிவை இட்டு தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் சின்னம் துடைப்பம். கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒருவரின் பதிவை ஷேர் செய்துள்ளார். அந்த பதிவில்  உள்ள புகைப்படத்தில், ஒரு நபர் துடைப்பம் வைத்துக் கொண்டு, இந்து மத சின்னத்தை துரத்துவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.

இது, இந்து மத உணர்வை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக பாஜக தலைவர்கள் பலர் குற்றம்சாட்டி உள்ளனர். இது தொடர்பாகடெல்லி சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவரான விஜேந்தர் சிங், "தேர்தல் ஆணையத்திடம் இதுகுறித்து புகார் அளிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம். அதற்காக தேர்தல் ஆணையத்திடம் நேரம் கேட்டுள்ளோம்" என்றார். தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவால் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன்னதாக ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் ராகவ என்பவர், 'பாஜக வீடு வீடாக சென்று வாக்கு கேட்கிறது' என்று கூறி, ஒரு வீட்டின் முன்பு பசு மற்றும் கன்று இருப்பது போன்ற புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close