கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்!

  Newstm Desk   | Last Modified : 24 Mar, 2019 10:58 am
manohar-parrikar-s-brother-run-a-grocery-store

மறைந்த கோவா முதல்வர் மனோகர் பரிக்கரின் சகோதரர், கோவாவில் மளிகைக் கடை நடத்தி வரும் செய்தி மற்றும் அவரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கோவாவை பூர்விகமாகக் கொண்ட மனோகர் பரிக்கர், 4 முறை கோவா முதல்வராக இருந்துள்ளார். அதற்கு முன்னதாக பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். மிகவும் எளிமையான ஒரு வாழ்க்கையை வாழ்ந்தவர். முதல்வர் என்ற அதிகாரத்திமிர் இல்லாமல் மக்களோடு மக்களாக வாழ்ந்தவர்.

அவருக்கு கடந்த ஆண்டில் கணைய புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து சிகிச்சை பலனின்றி கடந்த மார்ச் 17ம் தேதி காலமானார். அவரது மறைவு கோவா மக்களுக்கு பேரிழப்பாக இருந்தது. பிரதமர் மோடி உள்பட அரசியல் தலைவர்கள் பலர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 

இந்நிலையில் அவரது சகோதரர்  சுரேஷ் பரிக்கர் வடக்கு கோவா பகுதியில் மபுசா மார்க்கெட் பகுதியில் மளிகைக்கடை ஒன்று நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், சுரேஷ் பரிக்கரின் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பரிக்கரை போன்று அவரது குடும்பமும் ஒரு எளிமையான வாழ்க்கையை தான் வாழ்கிறது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close