நீங்கள் முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை மற்றொருவருக்கு மாற்றலாம் எப்படி?

  Newstm Desk   | Last Modified : 24 Mar, 2019 04:23 pm
irctc-ticket-booking-here-s-how-to-change-passenger-s-name-in-e-ticket

ரயில்களில் பயணம் செய்ய, நீங்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டை மற்றொருவருக்கு மாற்றம் செய்யலாம். அதாவது, ஒருவர் முன்பதிவு செய்த டிக்கெட்டில், வேறொருவர் பயணிக்கும் வசதி கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது. இதனை எப்படி மாற்றுவது? என்று பார்க்கலாம்.

இந்தியா முழுவதும் ரயிலில் பயணிப்பதற்காக, டிக்கெட் முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி(IRCT) என்ற இணையதளம் உள்ளது. இந்த இணையத்தளத்தின் மூலமாகவோ அல்லது ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரிலோ முன்பதிவு டிக்கெட்டை பெறலாம். முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்யும் வசதியும் உள்ளது. ரயில் புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு வரை டிக்கெட்டை ரத்து செய்தால் தொகை திருப்பி அளிக்கப்படும். 

எவ்வளவு நேரத்திற்கு முன்னதாக டிக்கெட் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதை வைத்து, குறிப்பிட்ட தொகையை கழித்துவிட்டு, மீதித் தொகை பயனாளருக்கு திருப்பி அளிக்கப்படுகிறது. 

ஒருவேளை அந்த முன்பதிவு டிக்கெட்டை நீங்கள் வேறு யாருக்கும் மாற்ற விரும்பினால், அதற்கும் தற்போது ரயில்வேயில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்துக்கு முன் உங்களது டிக்கெட்டை வேறொருவருக்கு மாற்றிக்கொள்ளலாம். யாரெல்லாம் டிக்கெட்டை மாற்றிக்கொள்ளலாம் என இதற்கு சில விதிமுறைகள் உள்ளன. 

ரயிலில் பயணம் செய்யும் நபர் குறித்த விபரங்கள், பயணிக்கும் நபரின் அடையாள அட்டை, முன்பதிவு செய்த டிக்கெட்டுடன் அருகில் உள்ள ரயில் நிலையத்தில் உள்ள தலைமை முன்பதிவு மேற்பார்வையாளரிடம் அளிக்க வேண்டும். அதில் அவர் கையொப்பமிட்டு திருத்தி அளிப்பார். அதைக்கொண்டு இரண்டாம் நபர் ரயிலில் பயணிக்கலாம். 

ஒருவர் தனது டிக்கெட்டை, தனது குடும்ப உறுப்பினர்களுக்கு மாற்றிக்கொள்ளலாம். தனது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள், சகோதர, சகோதரிகள் ஆகியோருக்கு மாற்ற முடியும். 

ஒருவர் அரசு ஊழியராக இருந்தால், ரயிலில் சார்ட் தயாராவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக தலைமை முன்பதிவு மேற்பார்வையாளரிடம் தெரிவித்துவிட்டு மாற்றலாம். 

ஒரே கல்வி நிறுவனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஒரு மாணவர் மற்றொரு மாணவருக்கு ரயில் டிக்கெட்டை மாற்றிக்கொள்ளலாம்.  ஆனால், ரயிலில் சார்ட் தயாராவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக தெரிவிக்க வேண்டும். 

ஒரு முக்கியமான நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என்றாலும், அதற்குரிய தகுந்த சான்றை சமர்ப்பித்து ஒரு நபரின் டிக்கெட்டை மற்றொரு நபருக்கு டிக்கெட்டை மாற்றலாம். அதேபோன்று என்.சி.சி டீமில் இருப்பவர்களும், சக மாணவருக்கு டிக்கெட்டை மாற்றிக்கொள்ளலாம். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close