எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ!

  Newstm Desk   | Last Modified : 24 Mar, 2019 09:50 pm
fire-in-aiims-hospital-trauma-center

புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் விபத்து பிரிவில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தில் இருந்த அனைத்து நோயாளிகளும் சரியான நேரத்தில் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தலைநகர் புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் விபத்து பிரிவில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக 4 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை அணைக்க முயற்சி செய்தனர். கட்டிடத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தெரியவந்து உள்ளது. 

இது குறித்து தீயணைப்பு படை வெளியிட்ட அறிக்கையில் "மாலை 6.12 மணியளவில், எய்ம்ஸ் மருத்துவமனையின் விபத்து பிரிவின் அடித்தளத்தில் தீ பற்றி எரிந்தது. இதனால், எந்த காயமும் ஏற்படவில்லை. புகை ஏற்பட்டதால் கட்டிடத்தின் மேல் தளத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்" என்று தெரிவிக்கப்பட்டது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close