இந்திய விமானப்படையின் சினூக் கனரக ஹெலிகாப்டர் அறிமுகம்!

  ஸ்ரீதர்   | Last Modified : 25 Mar, 2019 02:07 pm
indian-air-force-to-induct-the-first-unit-of-four-chinook-helicopters-today

இந்தியா விமானப்படை வாங்கியுள்ள 15 சினூக் கனரக லிப்ட் ஹெலிகாப்டர்களில் முதல் 4 ஹெலிகாப்டர்களை மக்களின் பார்வைக்கு இன்று அறிமுகம் செய்யப்பட்டது.

பஞ்சாப் தலைநகர், சண்டிகரில் இன்று இந்திய விமானப்படை அதன் 15 சினூக் கனரக லிப்ட் ஹெலிகாப்டர்களில் முதல் நான்கு ஹெலிகாப்டர்களை மக்களின் பார்வைக்கு அறிமுகம் செய்தது. பன்முக திறமைக்கொண்ட இந்த ஹெலிகாப்டர்கள், சீனா மற்றும் பாக்கிஸ்தானுடனான எல்லைப் பிரச்சனைகளின் போது இந்திய விமானப்படையின் பலத்தை அதிகரிக்க பயன்படும் என விமானப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சண்டிகரில் உள்ள விமானப்படை நிலையத்தின் விங் 12 விமான நிலையத்தில் இன்று முதல் நான்கு ஹெலிகாப்டர்களை விமானப்படைத் தளபதி பி.எஸ். தானோவா அறிமுகம் செய்தார்.  இந்நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, "நாடு பல பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், பல்வகைப்பட்ட திறன் நமக்கு தேவைப்படுகிறது. இந்தியாவின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சினூக் கனரக லிப்ட் ஹெலிகாப்டர் வாங்கப்பட்டுள்ளது, இது நம் தேசிய சொத்து" என தனோவா பெருமிதம் தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close