நான் குற்றவாளி அல்ல : கார்த்தி சிதம்பரம் கொக்கரிப்பு!

  ஸ்ரீதர்   | Last Modified : 25 Mar, 2019 02:58 pm
what-is-the-inx-media-case-what-is-the-role-of-karthi-chidambaram

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் சட்டவிரோதமாக அந்நிய முதலீடு செய்ய கார்த்தி சிதம்பரம் உதவியதாக எழுந்த புகாரில், சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், நீதிமன்ற அனுமதியுடன் வெளிநாடு சென்று  சென்னைக்கு திரும்பிய கார்த்தி சிதம்பரத்தை சில மாதங்களுக்கு முன் சிபிஐ கைது செய்தது.

இந்த வழக்கு கடந்து வந்த பாதையை பார்க்கலாம்: 2015, டிசம்பர்.1 -ஆம் தேதி கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான நிறுவனங்களில் அமலாக்கத் துறை ரெய்டு நடத்தியது. 2016, மே.23ம் தேதி வெளிநாட்டில் உள்ள கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் குறித்த விசாரணையை அமலாக்கத் துறை ஆரம்பித்தது. 

வெஸ்ட் பிரிட்ஜ் மற்றும் அட்வான்டேஜ் செகோயா உள்ளிட்ட நிறுவனங்கள் விசாரணை வளையத்திற்குள் வந்தன. எனவே தொடர் ரெய்டுகள் நடத்தப்பட்டன. 2016, ஜூலை 5ம் தேதி, ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு தொடர்பாக ஆவணங்களுடன் அமலாக்கத்துறை முன்னிலையில் கார்த்தி சிதம்பரம் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. 

கார்த்தி சிதம்பரத்தின் செஸ் மேலாண்மை சேவைகள் பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனம்,ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திடமிருந்து 2 லட்சம் டாலர்கள் பெற்றுள்ளது என்று கூறப்பட்டது. 2017 ஜூன் மாதம் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தது. 


கார்த்தி சிதம்பரம், சி.பி.என்.ரெட்டி, ரவி விஸ்வநாதன், மோகனன் ராஜேஷ் மற்றும் பாஸ்கரராமன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் லுக்அவுட் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டது. 2017 ஆகஸ்ட் மாதம் ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு அந்நிய முதலீடு அங்கீகாரம் வழங்கிய வழக்கு தொடர்பாக சிபிஐ முன்னிலையில் கார்த்தி சிதம்பரம் ஆஜரானார். 

செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் கோரிய நிலையில், டெல்லி உயர்நீதிமன்றம் அல்லது பாட்டியாலா நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

2017 ஆகஸ்ட் 24ம் தேதி கார்த்தி சிதம்பரத்திடம் 8 மணி நேரம் சிபிஐ விசாரணை நடத்தி 100க்கும் மேற்பட்ட கேள்விகளை எழுப்பியது. இது முழுக்க ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான கேள்விகளாக அமைந்திருந்தது. 2017, செப்டம்பர் 11ம் தேதி கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

 2017, நவம்பர் 16ம் தேதி வெளிநாடு செல்ல கார்த்தி சிதம்பரம் அனுமதி கேட்ட நிலையில், அதுகுறித்து பதில் அளிக்க சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 2017-நவம்பர் 12- டிசம்பர் 1லிருந்து 10ம் தேதி வரை இங்கிலாந்து செல்ல கார்த்தி சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. 

2018- ஜனவரி 12ம் தேதி  ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. 2018,  ஜனவரி 29ம் தேதி அமலாக்கத்துறை கார்த்தி சிதம்பரத்திற்கு மீண்டும் புதிதாக சம்மன் அனுப்பியது. 2018, ஜனவரி 31ம் தேதி  கார்த்தி சிதம்பரத்திற்கு எதிரான லுக்அவுட் நோட்டீசில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது.

2018, பிப்ரவரி மாதம், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை மீண்டும் கார்த்தி சிதம்பரத்திற்கு சம்மன் அனுப்பியது. 2018 பிப்ரவரி. 16ம் தேதி  கார்த்தி சிதம்பரத்திற்கு நெருக்கமானவரும், அவரின் ஆடிட்டருமான பாஸ்கர் ராமன் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார். 

2017 ஆகஸ்ட் 22ம் தேதி ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தன் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து

2018- பிப்ரவரி. 17ம் தேதி சிபிஐ எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. 2018- பிப்ரவரி 22ம் தேதி தனக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று, உச்சநீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். 2018, பிப்ரவரி 28ம் தேதி சென்னை விமான நிலையத்தில் வைத்து சிபிஐயால் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். 

இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட கார்த்தி சிதிம்பரத்திற்கு வாய்பளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம்‌ பேசிய கார்த்தி சிதம்பரம் தன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close