அருணாசலப் பிரதேசம் இல்லாத 30,000 உலக வரைபடங்களை அழித்தது சீனா

  Newstm Desk   | Last Modified : 26 Mar, 2019 01:16 pm
china-destroys-30-000-world-maps-for-not-showing-arunachal-as-their-territory

அருணாசலப் பிரதேச மாநிலத்தை தங்கள் நாட்டின் பகுதியாக அடையாளப்படுத்தாத 30,000 உலக வரைபடங்களை சீனா அழித்துள்ளது. சீனாவில், இருந்து ஏதோவொரு நாட்டுக்கு ஏற்றுமதியாகவிருந்த இந்த வரைபடங்களை அந்நாட்டு சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி அழித்துள்ளனர்.

எனினும், இந்த வரைபடங்கள் எந்த நாட்டுக்கு ஏற்றுமதியாகவிருந்தன என்ற விவரம் வெளியாகவில்லை.

திபெத்தை சீனா ஆக்கிரமிப்பு செய்து ஆட்சி செய்து வருகிறது. அதிலும், திபெத்தின் தெற்குப் பகுதிக்கு சொந்தமானதுதான் அருணாசலப் பிரதேசம் என்று அந்நாடு வெகு காலமாக சொந்தம் கொண்டாடி வருகிறது. குறிப்பாக, இந்தியப் பிரதமர், ராணுவ தளபதிகள் உள்ளிட்ட பெரும் தலைவர்கள் அருணாசலப் பிரதேசத்துக்கு செல்லும் சமயங்களில் எதிர்ப்பு தெரிவிப்பதை சீனா வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

இந்நிலையில், அருணாசலப் பிரதேசத்தை சீனாவின் பகுதியாக அடையாளப்படுத்தாத 30,000 வரைபடங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்று அந்நாட்டு அரசு செய்தி நிறுவனமான ‘குளோபல் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close