தனது பள்ளி ஆசிரியையை விமானத்தில் அழைத்து சென்ற விமானி

  ஸ்ரீதர்   | Last Modified : 26 Mar, 2019 01:38 pm
capt-rohan-takes-playschool-teacher-on-a-flight-to-chicago

டெல்லியை சேர்ந்த 33 வயதான ரோகன் பாசின் விமானியாக இருக்கிறார். இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 3 வயதில் டெல்லியில் உள்ள ஒரு மழலையர் பள்ளியில் சேர்ந்த போது அவருக்கு சுதா சத்யன் என்ற ஆசிரியை எழுத படிக்க கற்றுக் கொடுத்தார். 

தனக்கு கல்வி அறிவு அளித்து உயர்ந்த நிலைக்கு வர அடித்தளமிட்ட அவரை அவரை டெல்லியில் இருந்து அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகருக்கு விமானத்தில் அழைத்துச் சென்று கவுரவப்படுத்தினார். விமானத்தில் ஏறிய ஆசிரியை சுதா சத்யன் தனது இருக்கையில் அமர்ந்ததும், விமானி உடையில் அங்கு வந்த ரோகன் அவரை சக பயணிகள் முன்பு அறிமுகம் செய்து வைத்தார். 

இவர்தான் எனக்கு முதன் முதலில் கல்வி கற்றுக்கொடுத்த ஆசிரியை. இன்று நான் விமான கேப்டன் ஆக உயர இவரே காரணம் என பெருமையுடன் கூறினார். அதை கேட்டதும் பயணிகள் அனைவரும் கைதட்டி அவரை வரவேற்றனர்.

இதனால் மகிழ்ச்சியடைந்த சுதா சத்யன் ஆனந்த கண்ணீருடன் தனது மாணவர் கேப்டன் ரோகனை கட்டித் தழுவினார். இந்த மகிழ்ச்சியான தருணம் அனைவரையும் நெகிழ வைத்தது. கேப்டன் ரோகனின் தாயார் அவர் ஆசிரியை சுதா சத்யனுடன் எடுத்துக் கொண்ட போட்டாக்களை டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார்.
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close