ஃபேஸ்புக் தோழியிடம் 55 லட்சம் ரூபாய் அபேஸ் செய்த பலே ஆசாமி!

  Newstm Desk   | Last Modified : 26 Mar, 2019 08:55 pm
facebook-friend-fraud-woman-loses-rs-55-lakh-to-conman

ஃபேஸ்புக் நட்பு மூலம் பெண்ணிடம் 55 லட்சம் ரூபாயை அபேஸ் செய்ய ஆசாமியை போலீஸார் தேடி வருகின்றனர்.

கொல்கத்தாவைச் சேர்ந்த 52 வயது பெண் ஒருவரின் ஃபேஸ்புக் பக்கத்துக்கு கடந்த மாதம் ஒரு ஆண் நபரிடமிருந்து ஃப்ரண்ட் ரிக்கொஸ்ட் வந்துள்ளது. அதனை அந்த பெண்மணி ஏற்றுகொண்ட மறுகணமே அவரை தொடர்புக்கொண்ட அந்த நபர், தான் விமானி என்றும், லண்டனில் வசித்து வருவதாகவும் அறிமுகம் செய்துக் கொண்டுள்ளார்.

தொடர்ந்து தினமும் இருவருக்கும் இடையே ஃபேஸ்புக்கில் நட்பு வளர்ந்துள்ளது. ஒரு வாரத்துக்கு பிறகு அந்த நபர், இதயவடிவ பொன் நகையும், பரிசுப்பொருள்களும் அனுப்பியுள்ளதாகவும், வங்கிக் கணக்கில் 70 ஆயிரம் டாலர்கள் பணத்தை டெபாசிட் செய்வதாகவும் கூறி, அப்பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

தொடர்ந்து, அந்த பரிசுப் பொருள்கள் சுங்கத் துறை அதிகாரிகள் வசம் சிக்கிக் கொண்டுள்ளதாகவும், அதனை விடுவிக்க தமது நண்பர் சலீம் கானின் வங்கிக் கணக்கில் 45 ஆயிரம் ரூபாய் செலுத்தும்படி அந்த நபர் கூறியுள்ளார். அவரது பேச்சை நம்பி பெண்மணியும் பணத்தை செலுத்தியுள்ளார்.

அத்துடன், சுங்க வரி மற்றும் ஆர்பிஐ ஸ்டாம்ப் கட்டணத்துக்காக மேற்கொண்டு பணம் செலுத்தும்படி அந்த நபர் மீண்டும் சொல்லியுள்ளார். அவரது பேச்சில் மயங்கி, 2 லட்சம் ரூபாய் முதல் 5.8 லட்சம் ரூபாய் வரை, சலீம் கான் வங்கிக் கணக்கில் கட்டியுள்ளார் அப்பெண்.

அதன் பிறகும்,  தனது நண்பர் அனுப்பியுள்ளதாக கூறிய பரிசுப் பொருள்கள் அடங்கிய பார்சல் தமக்கு வந்து சேராததால் ஏமாற்றத்தில் இருந்த பெண்ணை, சில நாட்களில் பேங்க் ஆஃப் அமெரிக்காவில் இருந்து பேசுவதாக மற்றொரு நபர் தொடர்பு கொண்டுள்ளார். "தங்களுக்கு வந்துசேர வேண்டிய பார்சலை சுங்கத் துறையிடமிருந்து விடுவிக்க, தாங்கள் எங்கள் வங்கியில் கணக்கு தொடங்கி அதில் 70 ஆயிரம் அமெரி்க்க டாலர்கள் பணத்தை டெபாசிட் வேண்டும்" என அந்த நபர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், அப்பெண்ணின் ஃபேஸ்புக் நண்பரும் 70 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசுத்தொகையை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்வதாகவும் பெண்ணுக்கு உறுதியளித்துள்ளார்.

தமது ஃபேஸ்புக் நண்பரின் பேச்சை நம்பி, வங்கிக் கணக்கையும் தொடங்கி, அதில் 70 ஆயிரம் அமெரிக்க டாலர் தொகையை ( இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 50 லட்சம்) அப்பெண்மணி டெபாசிட் செய்துள்ளார். அத்துடன் அத்தொகையை டெல்லி, ஹரியானா, உத்தரகண்ட், ஜெய்ப்பூர் ஆகிய இடங்களைச் சேர்ந்த, தமது ஃபேஸ்புக் நண்பர் சொன்ன 8 பேரின் வங்கிக் கணக்குகளில் 23 தவணைகளில் டெபாசிட் செய்துள்ளார்.

அதன் பிறகும், அவருக்கு நண்பரிடமிருந்து பரிசுப் பொருள்களும், அவரது வங்கிக் கணக்குக்கு 70 ஆயிரம் அமெரிக்க டாலர் பணமும் வந்து சேரவில்லை என்றபோதுதான், தாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை அந்த பெண் உணர்ந்துள்ளார். மிகவும் மனம்நொந்த அப்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஃபேஸ்புக் நட்பு மூலம் பல லட்சம் ரூபாய் அபேஸ் செய்த பலே ஆசாமியை தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close