விமானப்படை வீரர் அபினந்தன் ஸ்ரீநகர் திரும்பினார்

  ஸ்ரீதர்   | Last Modified : 27 Mar, 2019 12:04 pm
iaf-pilot-abhinandan-varthaman-returns-to-his-squadron-in-srinagar

பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டு பின்னர் 2 நாட்கள் கழித்து விடுவிக்கப்பட்ட இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் 4 வார மருத்துவ விடுப்பில் உள்ள நிலையில், மீண்டும் ஸ்ரீநகர் திரும்பியுள்ளார். 

மருத்துவ விடுப்பு நாட்களில், சென்னையில் உள்ள தனது குடும்பத்தினருடன் இருப்பதை விட அபினந்தன் ஸ்ரீநகரில் உள்ள தனது படைபிரிவினருடன் இருப்பதையே விரும்புகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானிலிருந்து திரும்பிய பின்னர் பாதுகாப்பு அதிகாரிகளின் 12 நாட்கள் விசாரணைக்கு பின்னர் அபினந்தன்  விடுமுறையில் அனுப்பப்பட்டார். 

அவரது நான்கு வார விடுப்புக்கு பின்னர் மருத்துவக் குழு அவரது உடல்தகுதியை ஆராய்ந்து அவர் மீண்டும் போர்விமானத்தை இயக்க அனுமதிப்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாம்கள் மீது இந்திய விமானைப்படை வீரர்கள் கடந்த மாதம் 26ம் தேதி குண்டுகள் வீசி பயங்கரவாத பயிற்சி முகாமை தரைமட்டமாக்கினர்.

இதைத்தொடர்ந்து மறுநாளே, இந்திய பகுதியில் பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியது. அப்போது இந்திய போர் விமானங்கள் குறுக்கிட்டு அவற்றை தடுத்து நிறுத்தின. இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் எப்-16 ரக போர் விமானத்தை, இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் சுட்டு வீழ்த்தினர்.
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close