வங்கதேச அடுக்குமாடி கட்டிட தீ; 25 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 29 Mar, 2019 10:14 pm
bangladesh-skyscraper-fire-25-dead

வங்கதேச தலைநகர் தாக்காவில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் நேற்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளதாக தாக்கா காவல்துறை தெரிவித்துள்ளது. 

வங்கதேச தலைநகர் தாக்காவில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 22 மாடிகள் கொண்ட எஃப்.ஆர் டவர்ஸ் எனப்படும் கட்டிடத்தில் நூற்றுக்கணக்கான அலுவலக பணியாளர்கள் இருந்த நிலையில், தீ வேகமாக பரவியது. இதைத் தொடர்ந்து, மேல் தளங்களில் இருந்த பலர், கட்டிடத்தின் பக்கவாட்டின் வெளியே, கயிறுகளின் மூலம் கீழே இறங்கினர். பலர் வெப்பம் தாங்காமல் கட்டிடத்திலிருந்து கீழே குதித்தனர். 

இதுபோல குதித்து, 6 பேர் இறந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி தீயை அணைத்த நிலையில், நேற்று 19 பேர் பலியானதாக தகவல்கள் வெளியானது. இன்று பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. "பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. 24 பேரின் உடல்களை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்து விட்டோம்" என்று தாக்கா காவல்துறை இணை ஆணையர் முஸ்தாக் அகமது தெரிவித்துள்ளார்.

விபத்துக்கான காரணம் குறித்தும், கட்டிடம் போதுமான பாதுகாப்புடன் செயல்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close