காங்கிரஸை தவிர அனைவரும் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கால் மகிழ்ச்சி: மோடி

  Newstm Desk   | Last Modified : 30 Mar, 2019 10:20 pm
people-are-happy-with-surgical-strike-not-the-congress-prime-minister-modi

காங்கிரஸ் கட்சியைத் தவிர நாட்டு மக்கள் அனைவருமே சர்ஜிக்கல் தாக்குதலால் மகிழ்ச்சியில் உள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி இன்று அசாமில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசினார்.

அசாம் மாநிலத்தின் திப்ருகர் தொகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய ராணுவம் முதல்முறையாக தீவிரவாதிகளை அவர்களது எல்லைக்குள் சென்று தாக்கியதாகவும், இதனால் இந்திய நாடே மகிழ்ச்சி அடைந்தாலும், காங்கிரஸ் கட்சி மற்றும் மகிழ்ச்சி அடையவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியபோது "இந்திய ராணுவம் முதல் முறையாக தீவிரவாதிகளை அவர்களின் எல்லைக்கு உள்ளேயே புகுந்து தாக்கியது. மொத்த உலகமும், இந்தியாவுக்கு ஆதரவாக நின்றது. இது காங்கிரஸ் குடும்பத்தை தூக்கமிழக்கச் செய்தது. சமீபத்தில் நமது விஞ்ஞானிகள் விண்வெளி தொழில்நுட்பத்தில் பல்வேறு சாதனைகளைப் படைத்தனர். ஆனால் காங்கிரஸ் கண்ணீர் விட்டது. இந்தியா வல்லரசு நாடுகளுடன் சேர்ந்து நடக்கிறது. ஆனால் அதனால் காங்கிரஸ் வருத்தத்தில் உள்ளது. நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும் வலுவான அரசு வேண்டுமா, இல்லை ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்களின் அரசு வேண்டுமா" என்று பேசினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close