என் தந்தையின் கேள்விகளுக்கு பா.ஜ.கவினரால் பதில் சொல்ல முடியவில்லை: கார்த்தி சிதம்பரம்

  Newstm Desk   | Last Modified : 31 Mar, 2019 03:01 pm
rahul-gandhi-promises-special-status-to-andhra-if-voted-to-power

என் தந்தையின் கேள்விகளுக்கு பா.ஜ.கவினரால் பதில் சொல்ல முடியவில்லை என்று சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். 

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் இன்று மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், "என்னை யாராலும் பயமுறுத்த முடியாது. என் தந்தையின் கேள்விகளுக்கு பா.ஜ.கவில் பதில் சொல்ல முடியவில்லை. என் மீது எந்த வழக்கும் இல்லை. பொய்யான குற்றச்சாட்டுகள் மட்டுமே உள்ளன.  அச்சுறுத்தும் நோக்கத்திலேயே திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரி சோதனையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது" என்று பேசியுள்ளார். 

முன்னதாக, இன்று ப.சிதம்பரம், தனது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு வாக்கு கேட்டு சிவகங்கையில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close