தந்தையின் சேவையை தொடர விரும்புகிறோம்- பாரிக்கர் மகன்கள் விருப்பம்

  ஸ்ரீதர்   | Last Modified : 31 Mar, 2019 04:53 pm
would-like-to-continue-father-s-legacy-said-parikkar-s-son


தங்கள் தந்தை செய்து வந்த சேவைப் பணியினை நாங்களும் தொடர விரும்புகிறோம் என மறைந்த கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் மகன்கள் தெரிவித்துள்ளனர். 

கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர் கடந்த மார்ச் 17ஆம் தேதி கணைய புற்று நோய்க்கு தொடர் சிகிச்சை எடுத்துவந்த நிலையில் திடீரென உயிரிழந்தார். அதையடுத்து பிரதமர் நரேந்திர மோடியும் ஏனையா பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் நேரில் இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு பாரிக்கரின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.

 அதையடுத்து 14 கடந்த நிலையில் மனோகர் பாரிக்கரின் மகன்கள் தங்கள் தந்தை ஆற்றி வந்த சேவைப் பணிகளைத் தொடர விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், தந்தை இறந்தது மிகப்பெரிய சோகம்.  எங்கள் குடும்பத்தின் மீது அனைத்து நண்பர்களாலும் செலுத்தப்பட்டு வரும் அன்பும், ஆதரவும்  எங்களை தந்தை இறந்து துக்கத்திலிருந்து மீண்டு வர உதவி வருகிறது. 

எங்கள் தந்தை ஒவ்வொரு நாளும் உறுதியுடன் இந்த மாநிலத்துக்கும், நாட்டுக்கும் சேவை செய்வதையே விரும்பி வாழ்ந்து மறைந்தார். இறுதிவரை மாநில பிரச்சினைகள் தொடர்பான சிந்தனையிலேயே இருந்தார்.

எங்கள் தந்தையின் வாழ்க்கையை பெருமைப்படுத்தும் முகமாக அவரின் புத்திரர்கள் என்ற வகையில் தேசத்திற்கு தொண்டாற்றிட விரும்புகிறோம் என தெரிவித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close