பான்  - ஆதார் இணைப்புக்கான காலக்கெடு நீட்டிப்பு!

  Newstm Desk   | Last Modified : 01 Apr, 2019 11:16 am
pan-aadhaar-linkage-deadline-extended-till-sep-30

ஆதார் விவரங்களை பான் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடு வரும் செப்டம்பர் 30 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி கணக்குத் தாக்கலின்போது, வரி ஏய்ப்பு நோக்கத்துடன் நடைபெறும் முறைகேடுகளை களையும் பொருட்டு, அனைவரின் ஆதார் விவரங்களையும் பான் எண்ணுடன் இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியது. அத்துடன், மார்ச் 31 -ஆம் தேதிக்குள் இந்தப் பணி முடிக்கப்பட வேண்டும் என்றும் வருமான வரித் துறை உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது இந்தக் காலக்கெடு வரும் செப்டம்பர் மாதம் 30 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், தற்போது வருமான வரிக்  கணக்குத் தாக்கலின்போது, விண்ணப்பதாரர்கள் தங்களது ஆதார் விவரங்களை அளிப்பது அவசியமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டையுடன் இணைக்கப்படாத பான் எண்கள், மார்ச்  31 -ஆம் தேதிக்கு பிறகு செல்லுபடி ஆகாது என தகவல் பரவியதையடுத்து, இதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

2017 டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என  முதன்முதலாக வருமான வரித் துறை உத்தரவிட்டது. அதன் பிறகு இக்காலக்கெடு 2018 மார்ச் 31- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close