ராபர்ட் வதேராவுக்கு முன்ஜாமீன் வழங்கியது டெல்லி நீதிமன்றம்!

  Newstm Desk   | Last Modified : 01 Apr, 2019 04:45 pm
special-cbi-court-grants-anticipatory-bail-plea-to-robert-vadra-in-money-laundering-case

லண்டனில் வீடு வாங்க, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில், ராபர்ட் வதேராவுக்கு முன்ஜாமீன் வழங்கி டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

லண்டனில் வீடு வாங்கியதில் பணமோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்த் விசாரணை நடத்தி வருகிறது. 

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ராபர்ட் வதேரா, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணையில், ஏப்ரல் 1ம் தேதி வரை, வதேராவை கைது செய்ய நீதிமன்றம் இடைக்காலத்தடை வித்திருந்தது.  இதையடுத்து இன்று காலக்கெடு முடிவடையும் நிலையில், இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

விசாரணை முடிவில், ராபர்ட் வதேரா மற்றும் மனோஜ் அரோரா ஆகிய இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கி நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 5 லட்சம் ரூபாயை பிணைத் தொகையாக செலுத்தி, ராபர்ட் வதேரா மற்றும் மனோஜ் அரோரா ஆகிய இருவரும் இருவரும் முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்றும் நீதிமன்றத்தின் அனுமதியின்றி வெளிநாடு செல்லக்கூடாது என்றும் கூறியுள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close