அமெரிக்கா குற்றச்சாட்டுக்கு இஸ்ரோ பதில்

  ஸ்ரீதர்   | Last Modified : 03 Apr, 2019 02:28 pm
nasa-comments-on-anti-satellite-test

விண்வெளியில் அதிக குப்பைகளை மிதக்க விட்டுள்ள அமெரிக்கா இந்தியாவை குறை சொல்வது வியப்பாக உள்ளது என்று மகேந்திரா கார் நிறுவன தலைவர் ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ளார்.

செயற்கைக்கோள் ஒன்றை இந்தியா சுட்டு வீழ்த்தியிருப்பதை மோசமான விஷயம் என்று தெரிவித்திருக்கும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இது அச்சுறுத்தலாக இருக்கு என்று கூறியுள்ளது.

இதனிடையே அந்த ஏவுகணையின் சிதறிய பாகங்கள் ஆறு மாதகாலத்தில் தானாகவே எரிந்து சாம்பலாகிவிடும் என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைவருக்கான மூத்த ஆலோசகர் தபன் மிஸ்ரா கூறியுள்ளார்.

இந்திய கார் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ‌மகேந்திரா அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு தங்களுடைய கார்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிலையில் இந்தியா செயற்கைகோளை சுட்டு வீழ்த்தியிருப்பதை அமெரிக்கா விமர்சனம் செய்துள்ளது.

இதை தொடர்ந்து மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா அமெரிக்கா குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்துகளை பதிவு செய்துள்ளார். அதில் விண்வெளியில் அதிக அளவில் குப்பைகளை சேர்த்துள்ள அமெரிக்கா இந்தியாவை குற்றம் சொல்வது ஆச்சர்யமாக உள்ளது என்றும் விண்வெளி அனைவருக்கு பொதுவானது என்று அதில் பதிவிட்டுள்ளார்.


newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close