டெல்லியில் சுவாரசியம்! மப்டியில் இருந்த போலீசிடம் தானாக வந்து சிக்கிய 'பலே' திருடன்!

  Newstm Desk   | Last Modified : 04 Apr, 2019 12:42 pm
april-fool-delhi-cops-in-lungi-tell-atm-thief-who-disclosed-his-plan

டெல்லியில் பல்வேறு பெயர்களில் ஏ.டி.எம்களில் திருடி வந்த 'பலே' திருடன், மப்டியில் இருந்த போலீசிடம் தானாக முன்வந்து தனது பெயர், முகவரி, அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து தெரிவித்துள்ளான். 

டெல்லியைச் சேர்ந்த அஸ்லாம் என்ற திருடன் கடந்த ஏப்ரல் 1ம் தேதி உத்தம்நகர் என்ற இடத்தில் உள்ள ஏ.டி.எம் ஒன்றிற்கு இரவு 9 மணியளவில் வந்துள்ளான். அப்போது அங்கு லுங்கியில் நின்று கொண்டிருந்த சிலரை, தனது புதிய கூட்டாளிகள் என்று கருதி ஏ.டி.எம்-இல் திருடுவது குறித்தும், தனது பெயர், முகவரி அனைத்தையும் அவர்களிடம் தெரிவித்துள்ளான். 

உடனடியாக, அவன் போலீசாரால் கைது செய்யப்பட்ட பிறகே, அங்கு இருந்த நபர்கள் மப்டியில் இருந்த 'போலீஸ்' என்று அவனுக்கு தெரிய வந்தது. அன்று ஏப்ரல் 1ம் தேதி என்பதால் போலீசார் அந்த திருடனுக்கு 'ஏப்ரல் ஃபூல்' என்று கூறி கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து, திருடன் அஸ்லாம் குறித்து விசாரணை செய்ததில், அவன் பல்வேறு பெயர்களில், பல்வேறு இடங்களில் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, அவன் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவனை சிறையில் அடைத்தனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close