ராகுல் போட்டியிடும் வயநாடு தொகுதியின் காங்கிரஸ் பொறுப்பாளராக கே.வீ.தங்கபாலு நியமனம்!

  Newstm Desk   | Last Modified : 04 Apr, 2019 02:02 pm
kv-thanagabalu-has-been-appointed-as-a-wayanad-constituency-congress-incharge

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியின் காங்கிரஸ் பொறுப்பாளராக கே.வீ.தங்கபாலு நியமிக்கப்பட்டுள்ளார். 

வருகிற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் தொடர்ந்து 4வது முறையாக போட்டியிடும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். 

வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய, இன்று காலை ஹெலிகாப்டர் மூலமாக வயநாடு வந்தார் ராகுல் காந்தி. தென்னிந்தியர்களின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில், அவர் வேட்டி - சட்டையுடன் வந்தார். ராகுல் காந்தியுடன், அவரது சகோதரியும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா வத்ரா மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் வந்திருந்தனர். தொடர்ந்து தொண்டர்கள் புடை சூழ, அவர் வயநாட்டில் வேட்புமனுத்தாக்கல் செய்தார். பின்னர் ப்ரியங்காவுடன் இணைந்து திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார். 

இதையடுத்து, கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியின் காங்கிரஸ் பொறுப்பாளராக கே.வீ.தங்கபாலு நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் நாகர்கோவிலில் நடந்த திமுக- காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி ஆங்கிலத்தில் பேசியதை, கே.வீ.தங்கபாலு தமிழில் தவறாக மொழி பெயர்த்ததாக அவர் மீது விமர்சனம் வந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close