பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயர்ந்த குடிமகன் விருது!

  Newstm Desk   | Last Modified : 12 Apr, 2019 04:47 pm
uae-has-conferred-its-highest-civilian-honour-on-prime-minister-narendra-modi

பிரதமர் நரேந்திர தாமோதர தாஸ் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயர்ந்த குடிமகன் என்ற விருதை அந்நாட்டு அரசு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. 

இருநாடுகளின் மேம்பாட்டிற்கு தீவிரமாக பணியாற்றியதை கௌரவிக்கும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர தாமோதர தாஸ் மோடிக்கு உயர்ந்த குடிமகன் என்ற விருதை ஐக்கிய அரபு அமீரகம் வழங்கவுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி ஷேக் கலீஃபா பின் ஸாயீத் அல் நாகியான்அறிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்திய நாடுகளுக்கிடையே வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானம் போன்ற பல துறைகளில் இரு நாடுகளும் பரஸ்பர ஒத்துழைப்புடன் முன்னேறுவதற்கு தீவிரமாக பணியாற்றிய பிரதமர் மோடியை கௌரவிக்கும் வகையில் உயர்ந்த குடிமகன் விருது வழங்கப்படுவதாக ஐக்கிய அரபு அமீரக அரசு குறிப்பிட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close