ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு ’நோ பெட்ரோல்’- இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு

  ஸ்ரீதர்   | Last Modified : 05 Apr, 2019 05:00 pm
indian-oil-corporation-stops-fuel-supply-to-jet-airways

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திடமிருந்து நிலுவை தொகை வராததையடுத்து, அந்நிறுவனத்தின் விமானங்களுக்கு எரிபொருள் வழங்குவதை இந்தியன் ஆயில் நிறுவனம் இன்று முதல்நிறுத்தியுள்ளது.

கடும் கடன் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு கடந்த சில மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு நிலவி வருகிறது.

இதையடுத்த ஜெட் ஏர்வேஸின் விமானிகள் மற்றும் தொழில்நுட்ப பிரிவினர் சங்கம் தங்களுக்கு ஊதியம் வழங்கவில்லையென்றால் வேலை நிறுத்த போரட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து அவர்களுக்கு டிசம்பர் மாத ஊதியம் வழங்கப்படும் என அந்நிறுவனத்தின் நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு எரிபொருள் வழங்கி வந்த இந்தியன் ஆயில் நிறுவனம் இன்று முதல் எரி‌பொருள் வழங்குவதை நிறுத்தி கொண்டுள்ளது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு தர வேண்டிய நிலுவை தொகையை இதுவரை செலுத்தப்படாததையடுத்து , அந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு வந்த எரிபொருள் நிறுத்தப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close