ஐஏஎஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு: மும்பை ஐஐடி பட்டதாரி முதலிடம்!

  Newstm Desk   | Last Modified : 05 Apr, 2019 10:58 pm
upsc-final-results-released

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கு நடத்தப்பட்ட, 2018 - ஆம் ஆண்டுக்கான இறுதி தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

மத்திய குடிமைப் பணிகள் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ள இத்தேர்வு முடிவில், மும்பை ஐஐடியில் பி.டெக்., பட்டம் பெற்றுள்ள கனிஷாக் கட்டாரியா இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

இதேபோன்று, மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகரான போபாலை சேர்ந்த சுருஸ்தி ஜெயந்த் தேஷ்முக் என்ற பி.இ. பட்டதாரி, பெண்கள் பிரிவில் முதலிடமும், தேசிய அளவிலான தரவரிசை பட்டியலில் ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளார்.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட பல்வேறு குடிமைப் பணிகளுக்கு மொத்தம் 759 பேர் அடங்கிய தேர்வுப் பட்டியலை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதில், 577 பேர் ஆண்கள், 182 பேர் பெண்களாவர். 

ஐஏஎஸ் தேர்வில், இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ள கனிஷாக் கட்டாரியா, எஸ்.சி. பிரிவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close