கேரளா வயநாட்டில் இருந்து ஐ.ஏ.எஸ் அதிகாரியாகும் முதல் ஆதிவாசி பெண்!

  Newstm Desk   | Last Modified : 06 Apr, 2019 11:29 am
first-person-from-the-scheduled-tribes-in-the-district-to-clear-civil-services-exam

2018ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், வயநாடு பகுதியைச் சேர்ந்த ஆதிவாசி பெண் ஒருவர் தேர்வில் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளார். 

கேரள மாநிலம் வயநாடு பகுதியைச் சேர்ந்த ஆதிவாசிகள் சுரேஷ்- கமலம் தம்பதியினரின் மகள் தன்யாஸ்ரீ (வயது 26). நடந்து முடிந்த 2018ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியான நிலையில், அதில் தன்யா ஸ்ரீ 410வது இடம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 

மிகவும் ஏழ்மையான குடுமபத்தைச் சேர்ந்த, இவர் ஒரு குடிசை வீட்டில் தான் வசித்து வந்துள்ளார். கலெக்டர் ஆகவேண்டும் என்று சிறுவயது முதலே தீராத ஆசையுடன் இருந்த அவர், தற்போது சாதித்து காட்டியுள்ளார். நேர்முகத்தேர்வுக்கு டெல்லி செல்வதற்கு கூட பணம் இல்லாத நிலையில், அவரது பெற்றோர்கள் கடன் வாங்கி மகளை டெல்லிக்கு அனுப்பினர். 

தற்போது தன்யாஸ்ரீயின் வெற்றியை அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். கேரளாவில் இருந்து ஆதிவாசி பெண் ஒருவர் கலெக்டர் ஆவது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close