எப்.16 சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான ஆதாரம் உள்ளது- இந்திய விமானப்படை

  ஸ்ரீதர்   | Last Modified : 06 Apr, 2019 12:51 pm
have-proof-pakistani-f-16-shot-down-says-air-force

பாகிஸ்தானின் போர் விமானம் எப்.16 சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான ஆதாரம் இருப்பதாக இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 27ம் தேதி காஷ்மீரின் நவ்சேரா பகுதியில் பாகிஸ்தானின் 11 எப் 16 ரக போர் விமானங்கள், 13 ஜே.எப்.17 ரக விமானங்கள், மற்றும் மிராஜ் விமானங்கள் இந்திய ராணுவ நிலைகள் மீது குண்டு வீசுவதற்காக எல்லைத் தாண்டி வந்தன.

இந்திய விமானப்படையினர் மிக் 21 பைசன் விமானங்கள் மூலம் அவற்றை எதிர்கொண்டு விரட்டியடித்தனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தன், எப் 16 விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தினார். ஆனால் எப்.16 விமானங்களைப் பயன்படுத்தவே இல்லை என்று பாகிஸ்தான் மழுப்பி வருகிறது.

இந்நிவையில் பாகிஸ்தானில் நிலை நிறுத்தப்பட்டுள்ள எப் 16 விமானங்களின் எண்ணிக்கை சரியாக உள்ளது. எனவே, இந்திய விமானப்படை எப் 16 விமானத்தை சுட்ட வீழ்த்தியதாகக் கூறுவது சரியான தகவலாக இல்லை என்று அமைரிக்க பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, எப்.16 விமானம் புறப்பட்ட இடத்திற்கு திரும்பவே இல்லை என்பதற்கான வலுவான ஆதாரம் இருப்பதாக இந்திய விமானப் படை அதிகாரிகள் கூறுகின்றனர். விமானம் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் விழுந்து விட்டதால் நேரடியாக ஆதாரம் காண்பிக்க முடியாத போதும் இதர ஆதாரங்கள் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது எப்.16 தான் என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரம்  உள்ளது என இந்திய விமானப் படை அறிவித்துள்ளது.

ராடார் கருவிகளில் பதிவான சமிக்ஞைகள், எப் 16 மாயமான போது கண்காணிப்புத் திரையில் இருந்து அது காணாமல் போன குறியீடுகள், மின்னணு கையெழுத்துகள், இரண்டு பாராசூட்டுகளில் விமானிகள் குதித்து உயிர்தப்பியதை நேரில் கண்ட சாட்சிகள் என ஆதாரங்களை இந்திய விமானப்படை திரட்டியுள்ளது.

newstm.in


 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close