காங்கிரசில் இணைந்தார் பாஜக எம்.பி., சத்ருகன் சின்ஹா!

  Newstm Desk   | Last Modified : 06 Apr, 2019 01:05 pm
bjp-mp-shatrughan-sinha-joined-congress

பாஜக அதிருப்தி எம்.பி.,யும்,  முன்னாள் மத்திய அமைச்சருமான சத்ருகன் சின்ஹா காங்கிரசில் இணைந்தார்.

பாஜகவை சேர்ந்த மக்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சத்ருகன் சின்ஹா கடந்த பல மாதங்களாக பிரதமர் மோடியையும், பாஜக தலைவர் அமித்ஷாவையும் விமர்சித்து வந்தார். இந்நிலையில், வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட சத்ருகன் சின்ஹாவுக்கு பாஜக சீட் வழங்கவில்லை. அவருக்கு பதில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் போட்டியிடுகிறார். 

இந்நிலையில், டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர்  கே.சி.வேணுகோபால் மற்றும் ரன்தீப் சுர்ஜிவாலா முன்னிலையில் சத்ருகன் சின்ஹா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.  இவர் பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா சாஹிப் தொகுதியில் வெற்றிபெற்று 2 முறை மக்களவை உறுப்பினராக தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close