ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் செயலிகள் விண்டோஸ் போன் தளத்தில் இயங்காது

  ஸ்ரீதர்   | Last Modified : 06 Apr, 2019 08:43 pm
facebook-and-messenger-apps-will-leave-windows-phone-on-30th-april

ஃபேஸ்புக் நிறுவனம் தனது குழும செயலிகளை விண்டோஸ் போன் தளத்தில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது. ஏப்ரல் 30 ஆம் தேதி முதல் ஃபேஸ்புக் மற்றும் மெசஞ்சர் செயலிகள் விண்டோஸ் தளத்தில் இயங்காது என மைக்ரோசாஃப்ட் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

விண்டோஸ் போன் தளம் அதிகாரப்பூர்வமாக செயலற்ற நிலையில் இருப்பதால் செயலிகள் நீக்கப்படுவது பயனருக்கு அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தாது என்றே தெரிகிறது.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்று மெசஞ்சர் செயலியும் ஏப்ரல் 30 ஆம் தேதி முதல் விண்டோஸ் போன் தளத்தில் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு முதல் பல்வேறு மூன்றாம் தரப்பு செயலிகள் மைக்ரோசாஃப்ட் ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு வருகிறது.

2015 ஆம் ஆண்டு முதல் விண்டோஸ் போன் வியாபாரத்தை நிறுத்திக் கொள்வதாக மைக்ரோசாஃப்ட் தெரிவித்தது. மேலும் டிசம்பர் 2018 முதல் மென்பொருள் அப்டேட்களும் நிறுத்தப்பட்டன. தற்சமயம் விண்டோஸ் போன் 8.1 மற்றும் விண்டோஸ் போன் 10 தளங்களில் மட்டும் வாட்ஸ்அப் இயங்குகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close