பாலுக்கு பதிலாக சாராயத்தை ஊத்திக் கொடுத்த தந்தை - மீட்கப்பட்ட குழந்தை

  Newstm Desk   | Last Modified : 07 Apr, 2019 10:48 am
delhi-man-feed-his-3-yr-old-kid-with-alcochol-instead-of-milk

டெல்லியில் குழந்தை பசியால் அழும் சமயங்களில் பாலுக்கு பதிலாக மதுவை ஊற்றிக் கொடுத்துள்ளார் ஒரு தந்தை. அதிர்ச்சிக்குரிய இந்த சம்பவம் தெரிய வந்த நிலையில், அந்தக் குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

டெல்லியில் உள்ள பிரேம் நகர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநராக உள்ளார். அவருக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. அவரது மனைவி கடந்த ஆண்டு உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். இந்நிலையில், அந்த நபர் வேலைக்கு செல்லும் சமயங்களில் குழந்தையை அக்கம், பக்கத்தில் யாரிடமும் ஒப்படைக்காமல் வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு சென்றுவிடுவாராம். வீட்டில் இருக்கின்ற சமயங்களில் நிறைய குடித்துவிட்டு போதையில் இருப்பது அவரது வாடிக்கையாக இருந்திருக்கிறது. குழந்தை அழுதால், பால் புட்டியில் மதுவை புகட்டுவதையும் அவர் வழக்கமாக செய்து வந்திருக்கிறார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் டெல்லி மகளிர் ஆணையத்தினர் விரைந்து வந்து குழந்தையை மீட்டனர். முறையான பராமரிப்பு இல்லாமல், சிறுநீர் கழிவுகள் மீது தூங்கியபடி அந்தக் குழந்தை இருந்திருக்கிறது. இந்நிலையில், குழந்தையை மருத்துவமனையில் சேர்த்து, நோய் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு பின்னர், குழந்தைக் காப்பகத்தில் ஒப்படைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close