இந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை?

  Newstm Desk   | Last Modified : 07 Apr, 2019 11:25 am
earthquake-6-1-magnitude-quake-hits-indonesia-no-tsunami-alert

இந்தோனேசியாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 என பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. 

இந்தோனேசியா நாட்டின் மத்தியப் பகுதியில் உள்ள நுசா டெங்காரா(Nusa Tenggara) மாகாணத்தில் இன்று அதிகாலை  4.54 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. 

நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, மக்கள் பலரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கம் காரணமாக சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close