மஹாராஷ்டிரா- ரயில் நிலையத்தில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி பெண்

  ஸ்ரீதர்   | Last Modified : 07 Apr, 2019 02:29 pm
woman-delivers-baby-at-thane-railway-station

மஹாராஷ்டிராவில் ரயில் நிலையத்தில் கர்ப்பிணி ஒருவர் குழந்தை பெற்றெடுத்து உள்ளார்.

மஹாராஷ்டிராவின் அம்பிவாலி பகுதியில் இருந்து குர்லா நோக்கி செல்லும் ரயிலில் இஷ்ரத் ஷேக் என்ற கர்ப்பிணி பயணம் செய்துள்ளார். அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது.

அவரை ரயில்வே பாதுகாப்பு படை பெண் போலீசார் உடனடியாக தானே ரயில் நிலையத்தில் தனியார் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் ஒரு ரூபாய் கிளினிக்கிற்கு கொண்டு வந்துள்ளனர். இதன்பின் அங்கு அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இதுபற்றி ஒரு ரூபாய் கிளினிக்கின் தலைமை செயல் அதிகாரி ராகுல் குலே கூறும்பொழுது, தாய் மற்றும் குழந்தை இருவரும் நலமுடன் உள்ளனர். 

மும்பையில் உள்ள பல்வேறு ரயில்வே நிலையங்களில் செயல்பட்டு வரும் தனியார் தொண்டு நிறுவனமான எங்களது கிளினிக்குகள் குறைந்த செலவில் பயணிகளுக்கு பயணிகளுக்கு ஆபத்துகால சிகிச்சை அளித்து வருகின்றன. இதனை செயல்படுத்த வாய்ப்பு வழங்கிய ரயில்வே நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம் எனவும் அவா் கருத்து தொிவித்துள்ளாா்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close