விடுமுறைக்கு வந்த ராணுவ வீரர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை!

  Newstm Desk   | Last Modified : 07 Apr, 2019 03:27 pm
soldier-shot-dead-in-sopore

ஜம்மு காஷ்மீரில் விடுமுறைக்கு வந்த ராணுவ வீரர் ஒருவரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாராமுட்டா மாவட்டத்தில் வசித்து வருகிறார் ராணுவ வீரர் முகம்மது ரபி யாட்டூ. இவர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். நேற்று, அவரது வீட்டுக்கு அருகே உள்ள மசூதிக்கு சென்று தொழுது விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். 

அப்போது, அவரது வீட்டிற்கு அருகே பதுங்கிய தீவிரவாதிகள், திடீரென அவரது வீட்டிற்கு புகுந்து, ரபியை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு சென்றுவிட்டனர். சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். 

இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தீவிரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்புப்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close