உத்தரப்பிரதேசம்- மக்களின் குடிநீா் பிரச்சினையை தீா்க்க குளங்களை தூா் வாாிய இளைஞா்

  ஸ்ரீதர்   | Last Modified : 07 Apr, 2019 05:49 pm
26-year-old-engineer-helps-bring-10-ponds-back-to-life-in-greater-noida

உத்தரப்பிரதேசத்தில் மக்களின் குடிநீா் பிரச்சினையை தீா்க்க கடந்த 5 ஆண்டுகளாக 10 குளங்களை தூா் வாாிய இளைஞருக்கு பாராட்டுகள் குவிகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் கவுதம்புத் நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள கிரேட்டர் நொய்டாவில் ஏராளமான சிறிய அளவிலான குளங்கள் இருக்கின்றன. முறையாக இவை பராமரிக்கப்படாததால் கழிவுகள் தேங்கும் குட்டைகளாக மாறி உள்ளன. 

கிராம மக்களின் குடிநீர் பிரச்னை தீராத ஒன்றாக நீடிக்கவே, அப்பகுதியை சேர்ந்த ராம்வீர் தன்வார் குளங்களை தூர்வார முன்வந்துள்ளார். கிராம மக்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்ட அவர், சமூக வலைதளங்கள் மூலமாக தன்னார்வலர்கள் பலரை உடன் சேர்த்து கொண்டு வசூலாகும் நிதியைக் கொண்டு கடந்த 2014 ஆம் ஆண்டு குளங்களை தூர்வாரும் பணியை தொடங்கியுள்ளார்.

5 ஆண்டுகளில் 10 குளங்களை தூர்வாரியுள்ள 26 வயதான ராம்வீர், பன்னாட்டு நிறுவனத்துடனான தனது வேலையை விட்டுவிட்டு, முழுமூச்சாக இந்த பணியில் இறங்கி உள்ளார்.

பணத்தேவைக்காக மாலை நேரங்களில் டியூஷன் நடத்தியபடி சமூக சேவை ஆற்றும் இளைஞருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close