மோடியின் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில், எந்தவித ஊழலும் இல்லை: அமித் ஷா!

  Newstm Desk   | Last Modified : 08 Apr, 2019 12:01 pm
bjp-manifesto-releases-today

பிரதமர் மோடியின் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில், எந்தவித ஊழலும் நடைபெறவில்லை என்று தேர்தல் அறிக்கை நிகழ்வியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார். 

டெல்லியில் இன்று நடைபெறும் பாஜக தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா முதலில் பேசி, நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.

அவர் பேசுகையில், "பாஜக ஆட்சியில், ஏழைகளுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில், எந்தவித ஊழலும் நடைபெறவில்லை. மக்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்தல் அறிக்கையில் 50 முக்கிய முடிவுகளை எடுத்து உள்ளோம். கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டது போலவே, வரும் ஆண்டுகளிலும் நிறைவேற்றப்படும்" என்று பேசினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close