ரூ.200 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 4 பேர் கைது

  Newstm Desk   | Last Modified : 08 Apr, 2019 01:14 pm
rs-200-crore-worth-heroin-seized-four-arrested-in-delhi

டெல்லியில், விலை உயர்ந்த போதைப் பொருட்களை வெளிநாடுகளுக்கு சப்ளை செய்து வந்த, முக்கிய குற்றவாளிகள் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, ரூ.200 கோடி மதிப்பிலான, 50 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. 

அண்டை நாடுகளில் இருந்து நம் நாட்டிற்கு கடத்தி வரப்படும் போதைப் பொருட்கள், இங்கிருந்து வேறு சில நாடுகளுக்கு சப்ளை செய்யப்படுவது தெரிய வந்தது. 

இதையடுத்து, டெல்லியில் பதுங்கியிருந்து செயல்பட்டு வந்த போதைப் பொருள் கும்பலை, தேடும் பணியில், போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். 

அதன் பலனாக, போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் உட்பட, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 200 கோடி ருபாய் மதிப்பிலான 50 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை அனைத்தும், சர்வதேச சந்தையில் மிக அதிக விலைக்கு விற்பனையாகும் ஹெராயின் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

newstm.in


 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close