அந்தமான் தீவில் லேசான நிலநடுக்கம் 

  Newstm Desk   | Last Modified : 08 Apr, 2019 03:35 pm
an-earthquake-hit-andaman-islands-region-today

அந்தமான் தீவுகளின் சில பகுதிகளில், இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. 

வங்கக் கடலில், அந்தமான் நிக்கோபார் தீவுக் கூட்டங்கள் அமைந்துள்ளன. 300க்கும் மேற்பட்ட குட்டித் தீவுகள் உள்ளபோதும், சிலவற்றில் மட்டுமே மனிதர்கள் வசிக்கின்றனர். 

சில தீவுகளில், நாகரிக உலகத்தின் அடிச்சுவடே படாதா, பழங்குடியினத்தவர் வசிக்கின்றனர், இந்நிலையில், அந்தமான் தீவுகளின் சில பகுதிகளில், இன்று காலை, 7:30க்கு, லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. 

ரிக்டர் அளவையில், 5.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், உயிர் இழப்பு ஏதும் ஏற்படவில்லை என, அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கடலுக்கு அடியில், 10 கி.மீ., அழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் வானிலை மற்றும் புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

newstm.in.


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close