சிறந்த உயர்கல்வி நிறுவனங்கள் வரிசையில் சென்னை ஐஐடி-க்கு முதலிடம்!

  Newstm Desk   | Last Modified : 08 Apr, 2019 05:51 pm
nirf-india-rankings-2019-iit-madras-topped-miranda-house-topped-in-colleges-category


இந்த ஆண்டுக்கான சிறந்த உயர் கல்வி நிறுவனங்களின் வரிசையில், ஐஐடி - சென்னை தேசிய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த உயர்கல்வி நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவற்றுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 2019 -ஆம் ஆண்டுக்கான சிறந்த உயர் கல்வி நிறுவனங்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதில், பொறியியல் கல்வி நிறுவனங்களில், ஐஐடி - சென்னை தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளது. சட்ட கல்வி பிரிவில், பெங்களூரில் உள்ள தேசிய சட்டப் பள்ளியும், மருத்துவ கல்வி நிறுவன பிரிவில், டெல்லி எய்ம்ஸ் பல்கலைக்கழகமும் முதலிடத்தை பிடித்துள்ளன. கலை - அறிவியல் கல்லூரிகள் பிரிவில், டெல்லியில் உள்ள மிராண்டா ஹவுஸ் கல்லூரி முதலிடம் பெற்றுள்ளது.

டெல்லி விக்யான் பவனில் இன்று மாலை நடைபெற்ற வண்ணமயமான நிகழ்ச்சியில், சிறந்த உயர் கல்வி நிறுவனங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

சிறந்த உயர்கல்வி நிறுவனங்களுக்கான போட்டியில் இந்த ஆண்டு மொத்தம் 4,000-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் பங்கேற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close