பாக்., போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரேடார் பதிவுகள் வெளியீடு

  Newstm Desk   | Last Modified : 08 Apr, 2019 06:20 pm
iaf-reiterates-it-has-irrefutable-evidence-that-abhinandan-s-mig-21-bison-shot-down-pak-s-f-16

இந்திய வான்வெளியில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்த முயன்ற, பாகிஸ்தானின், எப்.,16 ரக போர் விமானத்தை, இந்திய விமான அபினந்தன் சுட்டு வீழ்த்தியதற்கான ஆதாரங்களை, ஏர் வைஸ் மார்ஷல் கபூர் வெளியிட்டார். இதன் முலம், பாக்., விமானப்படை, எப்., 16 ரக விமானங்களை பயன்படுத்தியதும், அதை, நம் விமானப்படை  சுட்டு வீழ்த்தியதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில், சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய விமானப்படையின் சார்பில், பாக்., எல்லைக்குள் தாக்குதல் நடத்தப்பட்டது. 

அந்நாட்டு எல்லையில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்கள் குண்டு வீசி அழிக்கப்பட்டன. இதற்கு பதில் தாக்குதல் நடத்தும் வகையில், பிப்ரவரி இறுதியில், பாக்., விமானப்படை, நம் நாட்டு வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, நம் ராணுவ முகாம்களை அழிக்க முயன்றது. 

அப்போது, நம் விமானப்படை வீரர்கள், அந்நாட்டு விமானங்களை துரத்தி அடித்ததோடு, அந்நாட்டு போர் விமானமான, எப்., 16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தினர். 

இதை செய்த நம் வீரர் அபினந்தன், எதிர்பாராத விதமாக அந்நாட்டு எல்லையில் சிக்கி பின், மத்திய அரசின் முயற்சியால், பத்திரமாக மீட்டெடுக்கப்பட்டார். 

இந்நிலையில், அமெரிக்க தயாரிப்பில் வடிவமைக்கப்பட்ட, எப்., 16 ரக விமானங்கள் அனைத்தும், தங்களிடம் பத்திரமாக உள்ளதாக, பாக்., ராணுவம் அறிவித்தது. இதை மறுக்கும் வகையிலும், நம் விமானப்படையின் செயல்பாட்டை நிருபிக்கும் வகையிலும், விமானப்படை ஏர் வைஸ் மார்ஷல், கபூர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

"இந்தியா - பாக்., விமானப்படை வீரர்களிடையே நடந்த சண்டையின் போது, அந்நாட்டு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான ஆதாரங்கள் வலுவாக உள்ளன. 

அப்போது நடந்த சண்டையின் போது, அந்நாட்டு எப்.,16 ரக விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான ரேடார் பதிவு வெளியிடப்படுகிறது. இதன் முலம், உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

இனினுமு், பாகிஸ்தான், தங்கள் தரப்பில் எந்த சேதமும் இல்லை என மறுக்க முடியாது. இந்திய வீரர் அபினந்தன், எப்., 16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தினார். அவரின் விமானமும் தாக்குதலுக்கு உள்ளாகி, அந்நாட்டு எல்லையில் சிக்கினார். பின் பத்திரமாக மீட்கப்பட்டார். 

இதன் முலம், பாகிஸ்தான் விமானப்படை, எப்., 16 ரக விமானத்தை பயன்படுத்தியதும், அது, இந்திய விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளது" என்றார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close