ம.பி.: வருமான வரித் துறை சோதனையில் ரூ.281 கோடி பறிமுதல்!

  Newstm Desk   | Last Modified : 08 Apr, 2019 10:16 pm
281-crore-in-cash-detected-during-raids-in-madhya-pradesh

மத்தியப்பிரதேச மாநில முதலமைச்சர் கமல்நாத்தின் உதவியாளர் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித் துறை சோதனையில்,மொத்தம் 281 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்தியப்பிரதேச மாநில முதலமைச்சர் கமல்நாத்தின் சிறப்பு உதவி அதிகாரியாகப் பணிபுரிந்த பிரவீன் கக்கார் என்பவரின் வீடு இந்தூரில் உள்ளது. அங்கு நேற்று அதிகாலை 3 மணி முதல் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது.

இதேபோல் கமல்நாத்தின் ஆலோசகராக இருந்த ஆர்.கே. மிக்லானியின் டெல்லி வீட்டிலும் சோதனை நடைபெற்றது. போபால், கோவா, டெல்லி உள்ளிட்ட ஊர்களில், இவர்களுக்கு தொடர்புடைய 50 இடங்களிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இச்சோதனைகளில் மொத்தம் 281 கோடி ரூபாய் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close