பிஹார் குடோனில் பயங்கர தீ விபத்து

  Newstm Desk   | Last Modified : 09 Apr, 2019 10:15 am
major-fire-broken-out-in-a-jute-godown-in-bihar

பிஹார் மாநிலத்தில் உள்ள சணல் குடோலின் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவி வருவதால், தீயை அணைக்கும் பணியில், வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 

பிஹார் மாநிலம் கதிஹார் பகுதியில் உள்ள சோனாலி சவுக் என்ற இடத்தில், தனியார் சணல் குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், டன் கணக்கில் சணல் முட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், இன்று அதிகாலை, இந்த குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது, லேசாக ஆரம்பித்த தீ, சற்று நேரத்தில் வேகமாக பரவியது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close