முல்லக்கலுக்கு எதிராக இன்று குற்றப்பத்திரிகை

  Newstm Desk   | Last Modified : 09 Apr, 2019 10:23 am
chargesheet-to-be-filed-against-franco-mulakkkal-today

கேரள மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய பேராயர் பிரான்கோ முல்லகல்லுக்கு எதிராக இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது.

ஜலந்தர் மறைமாவட்ட பேராயராக இருந்த பிரான்கோ முல்லகல் மீது கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் புகார் தெரிரிவித்தார். பல்வேறு சமயங்களில், அவர் தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கன்னியாஸ்திரி குற்றம்சாட்டியிருந்தார். இந்த விவகாரத்தில் முல்லகல்லுக்கு எதிராக கன்னியாஸ்திரிகள் கடும் போராட்டங்களை நடத்தியதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, வைக்கம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழு, இந்த வழக்கை விசாரித்து வந்தது. இந்நிலையில், பாலா அமர்வு நீதிமன்றத்தில் அவர்கள் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளனர். அதில், கன்னியாஸ்திரிகள், பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் உறவினர்கள், ஓட்டுநர் உள்ளிட்ட 83 பேரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close