சத்தீஸ்கரில் 34 நக்சல்கள் ஆயுதங்களுடன் சரண்! 

  Newstm Desk   | Last Modified : 09 Apr, 2019 10:30 am
chhattisgarh-34-naxals-surrendered-before-the-police-in-sukma

சத்தீஸ்கரில், பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வந்த, நக்சல் இயக்கத்தை சேர்ந்த, 34 பேர், தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து, போலீசாரிடம் சரண் அடைந்தனர். 

சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில், நக்சல்களின் ஆதிக்கத்தை ஒடுக்க, சிறப்பு படையினர் பல்வேறு முயற்சி மேற்கொண்டுள்ளனர். அரசு நலத்திட்டங்களை செயல்படுத்த விடாமல் தடுத்தல், கிராம மக்களை துன்புறுத்தி, அவர்களை அரசுக்கு எதிராக துாண்டிவிடுதல் உள்ளிட்ட நாசவேலைகளில், நக்சலைட்டுகள் ஈடுபட்டு வருகின்றனர். 

இவர்களை, மனம் மாறச்செய்து, சரணடைய வைக்கவும், அதற்கு மறுத்து, பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்துவோரை கைது செய்யவும், பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், சுக்மா மாவட்டத்தை சேர்ந்த, நக்சல் அமைப்பினர், 34 பேர், தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து, போலீசில் சரண் அடைந்தனர். அவர்களுக்கு மறு வாழ்வு அளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, அரசு அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். 

மக்களவை தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில், நக்சலைட்டுகள் சரண் அடைந்துள்ள சம்பவம், நல்ல அறிகுறியாக தெரிவதாக, சுக்மா மாவட்ட கலெக்டர் கருத்து தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close