முதல்வருக்கு நெருக்கமானவர் வீட்டில் மான், புலி தலைகள் பறிமுதல்

  Newstm Desk   | Last Modified : 09 Apr, 2019 11:25 am
trophies-of-black-buck-tiger-deer-leopard-etc-have-been-recovered-from-residence-of-ashwin-sharma

மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்தின் உதவியாளருக்கு நெருக்கமானவர் வீட்டில், மான், புலி, சிறுத்தை தலைகள் கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய பிரதேச மாநிலத்தில், முதல்வரின் உதவியாளர் பிரவீன் கக்கர் வீட்டில் சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள், பல கோடி ருபாய் ரொக்கம், நகைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் கக்கரின் நெருங்கிய நண்பரான அஷ்வின் வீட்டில், வருமான வரி மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சாேதனையில், அவரது வீட்டிலிருந்து, மான், புலி, சிறுத்தை தலைகர், அவற்றில் தோல் உள்ளிட்டவை பறிமுதல் செயெ்யப்பட்டன. 

இது குறித்து, வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக, விலங்குகளின் தலைகள் மற்றும் உடல் உறுப்புகளை வைத்திருந்ததாக, அஷ்வின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close