பூட்டிய அறையில் உருவாக்கப்பட்ட பாஜகவின் தேர்தல் அறிக்கை: ராகுல் விமர்சனம்!

  Newstm Desk   | Last Modified : 09 Apr, 2019 12:00 pm
rahul-tweet-about-bjp-manifesto

பாஜகவின் தேர்தல் அறிக்கை ஒரு பூட்டப்பட்ட அறையில் உருவாக்கப்பட்டதாகவும், அதே நேரத்தில் காங்கிரஸ் லட்சக்கணக்கான மக்களின் குரல் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

2019ம் ஆண்டுக்கான 19வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், வரும் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. பல்வேறு கட்சிகளும் தங்களது தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில், ஆளும் பாரதிய ஜனதா கட்சி, நேற்று (ஏப்.8) தங்களது தேர்தல் அறிக்கையை டெல்லியில் வெளியிட்டது. பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இருவரும் இணைந்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். இதில் விவசாயக்கடன், கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவை குறித்த 75 வாக்குறுதிகள் இடம்பெற்றன. 

இந்நிலையில், பாஜகவின் இந்த தேர்தல் அறிக்கை குறித்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை கலந்துரையாடல் மூலமாக உருவானது. லட்சக்கணக்கான மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. ஆனால், பாஜக தேர்தல் அறிக்கை ஒரு பூட்டப்பட்ட அறையில் உருவாக்கப்பட்டுள்ளது. அது, தனிப்பட்ட ஒரு மனிதரின் குரல் மட்டுமே. மேலும், குறுகிய பார்வை கொண்டது; கர்வமிக்கது" எண்டு பதிவிட்டுள்ளார். 

— Rahul Gandhi (@RahulGandhi) April 9, 2019

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close