பாஜக கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் மோடியா? - ராஜ்நாத் சிங் பதில்!

  Newstm Desk   | Last Modified : 09 Apr, 2019 03:47 pm
pm-candidate-is-modi-only-rajnath-singh

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தான் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

பிரபல தனியார் சேனல் ஒன்றிற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பேட்டியளித்தார். அப்போது பிரதமர் வேட்பாளர் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியதற்கு, "வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தான்.

பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத [பட்சத்தில் மற்ற கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன், நானோ, கட்கரியோ பிரதமர் ஆவோம் என்று சமூகவலைத்தளங்களில் பேசப்படுவது கற்பனையே. 

கடந்த முறை போலவே இந்த முறையும் பாஜக கூட்டணி வெற்றி பெறும். மீண்டும் மோடியே பிரதமராவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை" என்று தெரிவித்தார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close