பாகிஸ்தான் சிறைகளில் வாடிவந்த 100 இந்தியர்கள் விடுவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 09 Apr, 2019 05:27 pm
pakistan-releases-100-indian-prisoners

தங்களின் தண்டனைக் காலம் முடிந்தும், பாகிஸ்தான் சிறைகளில் வாடிவந்த இந்தியர்களில் 100 பேரை அந்த நாடு தற்போது விடுவிடுத்துள்ளது.

எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இந்திய மீனவர்கள் 483 பேரை பாகிஸ்தான் அரசு சிறைப்பிடித்து வைத்துள்ளது. மேலும்,  இந்திய -பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளைச்  சேர்ந்த 54 இந்திய குடிமக்களையும் பல்வேறு காரணங்களைச் சொல்லி பாகிஸ்தான் சிறைப்பிடித்துள்ளது.

இந்த 537 பேரில் 360 பேர், தங்களது தண்டனை காலம் முடிவடைந்த பின்னரும் தொடர்ந்து சிறையில் இருந்து வருவது மத்திய அரசு தெரிய வந்தது. இதையடுத்து, இந்தியர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என, பாகிஸ்தான் அரசுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அண்மையில் கடிதம் எழுதியிருந்தது.

இதையடுத்து, தற்போது இந்தியர்கள் 100 பேரை பாகிஸ்தான் விடுத்துள்ளது. அவர்கள் அனைவரும் இந்திய -பாகிஸ்தான் எல்லைப் பகுதியான வாகாவுக்கு நேற்றிரவு வந்தடைந்தனர்.

மேலும் 100 இந்தியர்களை  வரும் 15 -ஆம் தேதியும், 22 -ஆம் தேதி இன்னும் 100 இந்தியர்களையும் விடுவிக்க உள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மீதமுள்ள 60 பேர் இம்மாதம் 29 தேதி இந்தியாவுக்கு அனுப்பப்படவுள்ளனர் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close