தொடர்ந்து 50 ஆண்டுகள் எம்எல்ஏ; 11 முறை அமைச்சர்; கேரள மூத்த அரசியல்வாதி காலமானார்!

  Newstm Desk   | Last Modified : 09 Apr, 2019 06:43 pm
km-mani-kerala-s-longest-serving-legislator-dies-at-hospital-in-kochi

கேரள மாநில முன்னாள் நிதியமைச்சரும், கேரள காங்கிரஸ் (மாணி) கட்சியின் தலைவருமான கே.எம். மாணி இன்று காலமானார். அவருக்கு வயது 86. 

இவர் இரு தினங்களுக்கு முன்பு மார்பக தொற்று காரணமாக, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததாக மருத்துவர்கள் கூறி வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். 

கேரள காங்கிரஸ் (மாணி) கட்சியின் தலைவரான கே.எம் மாணி, கேரள மாநில சட்டப்பேரவை உறுப்பினராக தொடர்ந்து 50 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார்.

மேலும், கேரள மாநில நிதியமைச்சராக 4 முறையும், சட்ட அமைச்சராக 7 முறையும் பதவி வகித்துள்ளார்.  அரை நூற்றாண்டுக்கு மேல் அரசியல் தலைவராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றவர் கே.எம்.மணி. 

1967ம் ஆண்டு முதல் அவர் தேர்தலில் தோல்வி அடைந்ததே இல்லை. 1965 முதல் கேரளாவின் பாலா (Pala) தொகுதியில் போட்டியிட்டு வருகிறார். 

அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close