பீஹார் பள்ளி அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிப்பு

  Newstm Desk   | Last Modified : 10 Apr, 2019 11:52 am
ied-bomb-defused-in-gaya-bihar

பீஹாரில், பள்ளி அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாக செயலிழக்க செய்யப்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

பீஹாரின் கயா மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி அருகே, மர்ம பொருள் இருந்தை பார்த்த பொதுமக்கள், இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு வந்த போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த அவர்கள், அங்கிருந்து பொருள், சக்தி வாய்ந்த வெடிகுண்டு தான் என்பதை உறுதி செய்தனர். 

அந்த வெடிகுண்டு பத்திரமாக செயலிழக்க செய்யப்பட்டது. நாளை, மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட ஓட்டுப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், பீஹாரில், பள்ளி அருகே வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close