கண்டிப்பாக வாக்களியுங்கள்! - மக்களுக்கு மோடி, ராகுல் வலியுறுத்தல்

  Newstm Desk   | Last Modified : 11 Apr, 2019 10:48 am
modi-rahul-urges-people-to-vote

2019 மக்களவைத் தேர்தலுக்கான 7 கட்ட வாக்குப்பதிவுகளில், முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று(ஏப்.11) தொடங்கியுள்ளது. நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில், 20 மாநிலங்களில் 91 தொகுதிகளுக்கு தேர்தலானது இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. 

இத்துடன், ஆந்திரப்பிரதேசம், அருணாசலப் பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவும் இன்று நடைபெறுகிறது. 

இந்நிலையில், வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், அனைத்து மக்களும் வாக்களிக்குமாறு ட்வீட் செய்துள்ளனர். 

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "மக்களவைத் தேர்தல்- முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் அனைத்து வாக்காளர்களும் தங்களின் ஜனநாயக கடமையை தவறாமல் நிறைவேற்ற வேண்டும். அதிலும் குறிப்பாக, தங்களது முதல் வாக்கை செலுத்தவுள்ள இளைஞர்கள் அனைவரும் பெருவாரியாக வாக்களிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

அதேபோன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "2 கோடி வேலைவாய்ப்புகள் இல்லை. வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் போடவில்லை. அதற்கு பதிலாக, வேலையின்மை, பணமதிப்பிழப்பு, விவசாயிகளின் வலி, கப்பர் சிங் வரி, சூட் பூட் சர்கார், ரபேல், ஏகப்பட்ட பொய்கள், நம்பிக்கையின்மை, வன்முறை, வெறுப்பு, பயம். இந்தியாவின் ஆத்மாவிற்காக நீங்கள் வாக்களியுங்கள். நாட்டின் எதிர்காலத்திற்காக வாக்களியுங்கள். யோசித்து வாக்களியுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.  

 

— Rahul Gandhi (@RahulGandhi) April 11, 2019

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close