ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குடும்பத்தினருடன் வாக்களித்தார்!

  Newstm Desk   | Last Modified : 11 Apr, 2019 11:00 am
chandrababu-naidu-and-his-family-members-casts-their-vote-in-undavalli-village

ஆந்திர பிரதேச மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனது குடும்பத்தினருடன், தலைநகர் அமராவதியில் உள்ள உண்டவல்லி தொகுதியில் வாக்களித்தார். 

ஆந்திர பிரதேச மாநிலத்தில் 25 மக்களவைத் தொகுதிகளுக்கும், 175 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

ஆந்திர பிரதேச மாநில முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, அமராவதியில் உள்ள உண்டவல்லி(Undavalli ) கிராமத்தில் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். 

சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ் மங்களகிரி(Mangalagiri) சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கடப்பா மாவட்டத்தில் உள்ள புலிவேண்டுலா(Pulivendula) பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். 

மேலும், ஆந்திராவில் உள்ள பல வாக்குச்சாவடிகளில் இ.வி.எம் மெஷின் வேலை செய்யவில்லை என்று புகார் வந்தவண்ணம் உள்ளது. இது தனக்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்துவதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close